Saturday, June 4, 2016

வேற்றுக்கிரக உயிர்கள் பற்றிய தடயம் இலங்கையில் கண்டுபிடிப்பு

வேற்றுக்கிரக உயிர்கள் பற்றிய தடயம் இலங்கையில் கண்டுபிடிப்பு

ADAP TECH
உலகில் முதல் தடவையாக வேற்றுக்கிரக உயிர்கள் பற்றிய உறுதியான தடயம் ஒன்றை விஞ்ஞானிகள் இலங்கையில் இருந்து கண்டுபிடித்துள்ளார்கள்.அரலகன்வில பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எரிகல் துண்டுகளில் இருந்து விசேட அல்கா வகையொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பிரித்தானிய – இலங்கை ஒன்றிணைந்த ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

பக்ஹின்காம் பல்கலைக்கழகத்தின் வானசாஸ்திரவியல் பேராசிரியர் சந்திரா விக்கரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இதனை கண்டுபிடித்திருக்கின்றனர்.பிரபல ரஷ்யா ருடே இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ள கட்டுரை ஒன்றில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வேற்றுக்கிரக உயிரின் இருப்பு தொடர்பான கோட்பாட்டை உறுதி செய்வதற்குரிய தடயம் இலங்கையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜேர்னல் ஒவ் கொஸ்மொலொஜி என்ற சஞ்சிகை ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி தெரிவித்திருக்கின்றது.நாம் வாழும் பிரபஞ்சத்தில் உயிர்கள் உருவாவதற்கு வேற்றுக்கிரக மற்றும் எரிகல் தொகுதிகளே அடிப்படையாக அமைந்துள்ளன என்று அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.



புதிய கண்டுபிடிப்புகளுக்கமைய பிரபஞ்சத்தில் ஏனைய கிரகங்களில் உள்ள உயிர் பூமிக்கு வந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment