Saturday, June 4, 2016

அழிந்து வருகின்றது ஆண்கள் இனம்!? ஓர் அதிர்ச்சித் தகவல்


அழிந்து வருகின்றது ஆண்கள் இனம்!? ஓர் அதிர்ச்சித் தகவல்


Adap tech
உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவது வாடிக்கை என்றாலும் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப்பியுள்ளனர் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள். அதாவது உலகிலிருந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாம். பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியாக இருக்க முடியாது.

ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறுகிறார்கள் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தத் தகவலை பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ் என்ற பெண் விஞ்ஞானியே கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், உலகின் பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்பை அடைந்துள்ளன. அதில் ஒன்றாக ஆண் இனமும் சேர்ந்திருப்பது அதிர்ச்சியான தகவலாகும்.

பொதுவாக பெண் பாலினத்தை நிர்ணயிப்பது எக்ஸ் குரோமோசம்கள் ஆகும். இதில் ஒரு குரோமோசோமில் 1000 ஜீன்கள் இருக்கும். அதேபோல ஆண் பாலினத்தை நிர்ணயிக்கும் ஒய் குரோமோசோமிலும், ஆரம்பத்தில் ஒரு குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், தற்போதைய ஆண்களின் குரோமோசோமில் ஏறத்தாழ 100 ஜீன்கள் வரை குறைந்துள்ளது. அதில் முக்கியமான ஜீன் எஸ்ஆர்ஒய் ஜீனும் அடக்கம். Male master switch என்று அழைக்கப்படும் இந்த ஜீன்தான் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கும் மிக முக்கியமான ஜீன் ஆகும். தற்போதைய பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களுக்கு ஒரு ஒய் குரோமோசோம் மட்டுமே உள்ளது. இதனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதை அறியலாம்.

இருப்பினும் ஆண் இனம் முழுமையாக அழிவதற்கு 50 லட்சம் ஆண்டுகள் பிடிக்குமாம். அதுவரை பிரச்சனை இல்லை என்கிறார் ஜென்னி கிரேவ்ஸ். தற்போது சேகரிக்கும் டைனோசரஸ் முட்டை மாதிரி, ஆண் விந்தணுவை சேகரித்து வைக்கும் வங்கிகள் அதிகமாகலாம். இல்லையென்றால் அறிவியல் இன்னும் பல நினைத்துப் பார்க்க இயலாத கண்டுபிடிப்புகளைத் தரலாம். எனவே இது கவலைத் தரவேண்டிய விடயமாக இருக்காது என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment